Wednesday 7 January 2015

இசை




செவிகளில் ஊரிடும் ஓசைகள் ஏனோ இதயத்தில் வழிந்திட கண்டேன் 

உடல் யாவிலும் ஆங்கே உடன் இச்சைகள் நிரப்ப பாத்திரம் ஆனேன்

சரிந்து விழும் இலை சருகுகளை போலே புவியோடு நிதம் சகிதமானேன் 

கதை காரியம் ஏதுமின்றி புது பாதை தெறிய கண்டேன் வழி அதை தொடர்ந்தேன் 
ஆங்கே இசை வெள்ளம் ஓட கண்டேன்
அதனூடே சிறு மீன் கூட்டம் திரியக்கண்டேன்

பல்நிற பூக்கள் கண்டேன் - சளைக்காமல் அமுதுறிஞ்சும் கொற்றேனிகளை கண்டேன்
வசந்தத்தின் நாணல் கண்டேன் அதன் அசையும் ஆடல் கண்டேன் 

இன்னது இனியதென்று எவர் சொல்லி தந்தாரோ ? 

இலக்கணம் ஏதும் வேண்டா - இவை காட்சி முன்னிறுத்த மெய் கண்கள் கூறிடுமே அவைகள் ஆச்சர்யத்தின் உச்சமென்று. 

No comments:

Post a Comment